Ticker

6/recent/ticker-posts

Mandaadi Movie Cast and Crew

சூரி நடிக்கும் புதிய படம் "மண்டாடி".


நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி , விடுதலை பாகம் படத்தில் கதா நாயகனாக அறிமுகமானர் , பின்னர்  கருடன் , கொட்டுக்காளி என நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வரும் சூரி , அடுத்ததாக விலங்கு தொடர் இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் "மாமன்" படத்தில் நடித்துள்ளார் , இப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூரியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது , "மண்டாடி". என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை,  ஆர்.எஸ். இன்போ எல்ரெட்  குமார் தயாரிக்க , ஜி. வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, S.R. கதிர் ஒளிப்பதிவில் ,  மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சத்யராஜ் , அச்யுத் குமார் , சுஹாஸ் , சஞ்சனா நிமிதாஸ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர் .



இப்படத்தின் கதை கடல் சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது , ஏனெனில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட சூரி பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார் , 

" எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா இரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது "

Post a Comment

0 Comments