அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் புதிய படம் :
புஷ்பா படத்தை அடுத்து , சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் , அட்லீ இயக்கத்தில் , அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார் . அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 8) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படம் ராஜா ராணி , தெறி, மெர்சல் , பிகில், ஜவான் படங்களை தொடர்ந்து அட்லீ இயக்கும் ஆறாவது படமாகும் , மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் இருபத்தி இரண்டாவது படமாகும், எனவே இப்பொழுது இப்படத்தை AA22xA6 என்று அழைக்கிறார்கள், மேலும் அதிக பொருட்செலவில் , ஆங்கில படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு , பிரம்மாண்டம் மற்றும் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ளது.
விரைவில் படத்தின் தலைப்பு , மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments