விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் பொங்கல் 2026
ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய் நடிக்கும் "ஜன நாயகன்" திரைப்படம் படம் அடுத்த வருடம் பொங்கல் ( 09.01.2026) ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது, மேலும் இப்படம் தனது கடைசி படம் என ஏற்கனவே தெரிவித்து உள்ளார் , இதற்கு பின்பு தீவிர அரசியலில் ஈடுபட போகிறார் . எனவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது .
இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய விஜய் படங்கள் மொத்தம் 14 , கோயம்புத்தூர் மாப்பிள்ளை , காலமெல்லாம் காத்திருப்பேன் , கண்ணுக்குள் நிலவு, ப்ரண்ட்ஸ் , திருப்பாச்சி , ஆதி , போக்கிரி , வில்லு , காவலன், நண்பன் , ஜில்லா , பைரவா , மாஸ்டர் , மற்றும் வாரிசு .. இதனைத்தொடர்ந்து தற்போது ஜன நாயகன் 15 வது படமாக வரும் ஜனவரி ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
"பராசக்தி"
சூரரைப் போற்று , இறுதிச் சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி .வி . பிரகாஷ் குமார் இசையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் "பராசக்தி" , இது சிவகார்த்திகேயனின் 25 வது படம் , மேலும் இப்படத்தில் ஸ்ரீ லீலா , அதர்வா , ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் , 1960 காலகட்டத்தில் நடந்த உண்மைக்கதையை மையமாக கொண்டுள்ள படம் என்பதால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமுள்ளது .
"ஜன நாயகன்" பட ரிலீஸ் தேதியை அறிவித்த பின்னரும் , பராசக்தி படத்தை வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம்” என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்கு ( "ஜன நாயகன்" VS "பராசக்தி" ) கொண்டாட்டமாக இருக்கும் .
0 Comments