Ticker

6/recent/ticker-posts

STR 49 Movie Update

 கல்லூரி கதைக்களத்தில் சிலம்பரசனின்  STR 49 : அசத்தல் அப்டேட் 

சிலம்பரசன் நடிக்கவுள்ள 49 வது படத்தை , பார்க்கிங் பட புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார், டான் பிச்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார் .

இப்படத்தில் லோஹர் நாயகியாக நடிக்க, சந்தானம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காமெடியனாக களம் இறங்குகிறார் என பல செய்திகள் வலம் வருகின்றன.

இந்நிலையில் , சமீமத்தில் பேட்டி ஒன்றில் இப்படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறுகையில் , 

STR49 படத்திற்காக பல இயக்குனர்களை தேடினோம் , சிலம்பரசன் தான் ராம் குமார் பாலகிருஷ்ணனை தேர்வு செய்தார்,  இத்திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் கதை , வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போல மாஸ் மற்றும் ரகளையாக இருக்கும் , மேலும் இப்படத்தில் நடிகர் சிலம்பரசனின் மற்றொரு பரிமாணத்தை காணலாம், வரும் ஏப்ரல் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் , படத்தை இந்த வருட இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது .

படத்தில் நடிக்கும் நடிகர் , நடிகையர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார் .

Post a Comment

0 Comments