Ticker

6/recent/ticker-posts

Sivakathikeyan Parasakthi Movie Release Date | Update

சிவகார்த்திகேயன் நடிக்கும்  பராசக்தி ஆர்.ஆர்.ஆர் போல பெரிய அளவிலான பீரியாடிக் படம் மற்றும் ரிலீஸ் அப்டேட் கொடுத்த  - தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.


சிவகார்த்திகேயனின் 25 வது படமாக மிக பிரம்மாண்டம் மற்றும் 1960 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உண்மை கதையை மையமாகக் கொண்டு  உருவாகும் திரைப்படம் தான் "பராசக்தி". இந்த படத்தை சூரரைப் போற்று , இறுதிச் சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க. ரவி கே சந்திரன் 

 ஒளிப்பதிவு செய்ய , ஜி .வி . பிரகாஷ் குமார் இசையமைக்க, டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். 

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா, பசில் ஜோசப், பிரித்விராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

1960 காலகட்ட கதை என்பதால், படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த கால தோற்றத்தில் நடிக்கின்றனர். எனவே படத்தின் படப்பிடிப்பு ரியல் லொகேஷனில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி மதுரை, காரைக்குடி, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “பராசக்தி படமானது ஆர்.ஆர்.ஆர் படத்தைப் போல் பெரிய அளவிலான பீரியாடிக் படம். பராசக்தி என்ற டைட்டில் கிடைத்தது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தை வரும் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments