கஜினி மாதிரி ஒரு ஆக்ஷன் மற்றும் இருண்ட பக்கத்தோட காதல் கதை தான் மதராஸி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் :
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் , அனிருத் இசையில் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் நடிக்கும் 23 வது படம் தான் "மதராஸி " .
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :
'மதராஸி' படத்தின் கதையை முதலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொன்னதாகவும் , அவர் நடிக்க சம்மதித்தார் , ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னரும் எந்த ஒரு பதிலும் அவரிடம் இருந்து வராததால் , இக்கதையை கொஞ்சம் விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் கூறினேன், அவர் நடிக்க ஒத்துக்கொண்டார், சிவாவுடன் பணியாற்றுவது ஓர் இனிய அருமையான அனுபவமாக இருக்கிறது .
மேலும் இப்படம் கஜினி மாதிரி ஒரு ஆக்ஷன் படம். கஜினி மாதிரி ஒரு இருண்ட பக்கத்தோட காதல் கதை. இன்னும் 22 நாட்கள் ஷூட்டிங் இருக்கு, ஏப்ரல் நடுப்பகுதியில ஷூட்டிங் மறுபடியும் தொடங்கும்.. என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
0 Comments