நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இணைந்து, ‘பரமசிவன் பாத்திமா’ என்ற படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் , எம் .எஸ் .பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘பரமசிவன் பாத்திமா’ என்ற படத்தின் ட்ரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வாழ்த்து :
அன்பு இளவல் இசக்கி கார்வண்ணன் அவர்களது இயக்கத்தில் அன்புத்தம்பி விமல் அவர்கள் நடித்து, விரைவில் வெளியாகவிருக்கும் பரமசிவன் பாத்திமா திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான நற்கருத்துகளைக் கொண்டு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவரும் இத்திரைப்படம் பெரும் வெற்றியடையவும், தம்பியின் திரைப்பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வாழ்த்து
‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திரு நடிகர் விமல் , இயக்குனர் திரு இசக்கி கார்வண்ணன் மற்றும் முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
0 Comments