வெளியான 2 நாட்களில் 100 கோடி வசூலை கடந்த ’எம்புரான்’:
கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லூசிபர்’. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படம் உருவாகியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ள ’எம்புரான்’ திரைப்படம் கடந்த 2025 மார்ச் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், படம் வெளியான 48 மணிநேரத்தில் , அதாவது 2 நாட்களில் , ‘எம்புரான்’ உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
0 Comments