Ticker

6/recent/ticker-posts

Dhanush in Idly Kadai Movie Release Postponed

ரிலீஸ் தேதி தள்ளி போகும் தனுஷின் "இட்லி கடை" படத்தை பற்றி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம் :


நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனையடுத்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும்  இப்படம் வரும் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவித்து இருந்தனர்.

ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10-20 சதவீதம்  நிறைவடையயாமல் உள்ளதாகவும் , படத்தில் அருண் விஜய் , பார்த்திபன் , ராஜ்கிரண் , நித்யா மேனன் ஆகியோர் ஒரே காட்சியில் நடிக்க உள்ளதால் இவர்களுக்கான நேரத்தை ஒதுக்க சிரமமாக இருந்ததாகவும், மேலும்  படம் நன்றாக வந்திருப்பதால் , அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விருப்புகிறோம், எனவே படத்தின் புதிய வெளியிட்டு தேதியை இன்னும் பத்து நாட்களுக்குள் அறிவிப்போம் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.

2025 ஏப்ரல் 10  ஆம் தேதி அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments