நாளை (28-02-2025) வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி" படத்தின் டீசர் ரிலீஸ் நேரம் மற்றும் கால அளவு (Duration)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி .வி .பிரகாஷ் இசையில், அஜித்குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
நாளை (28-02-2025) இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , டீசரின் மொத்த நீளம், வெளியாகும் நேரம் , இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது .
அதன்படி நாளை 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 7.03 மணிக்கு வெளியாகவுள்ள குட் பேட் அக்லி டீசர் , 1 நிமிடம் 34 நொடிகள் இருப்பதோடு, முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருப்பதோடு, வெறித்தனமாக கொண்டாட வைக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது .
0 Comments