களைகட்டும் கோலிவுட் பொங்கல் 2025 : இறுதியாக களம் காணும் படங்கள் :
விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் 2025 ரிலீசாகாது என்று அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததிலிருந்து , பல தமிழ் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது பொங்கல் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன .
ஏனென்றால் 2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை , அடுத்து 11 சனி & 12 ஞாயிறு (வார விடுமுறை), 14, 15, 16 பொங்கல் விடுமுறை (தமிழ் நாட்டில்), 18 சனி & 19 ஞாயிறு (வார விடுமுறை), என அதிக விடுமுறை நாட்கள் வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்த பல படங்கள் முயற்சிக்கின்றன .
இதுவரை தமிழில் 2025 பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள படங்கள்.
2025 ஜனவரி 10
1. கேம் சேஞ்சர்
2. வணங்கான்
3. மெட்ராஸ்காரன்
2025 ஜனவரி 12
4. மதகதராஜா
2025 ஜனவரி 14
5. காதலிக்க நேரமில்லை
6. நேசிப்பாயா
7 .தருணம்
மேலும் 2025 பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு இருந்த 2K லவ் ஸ்டோரி, படைத்தலைவன், டென் ஹவர்ஸ் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை , இப்படங்கள் பொங்கல் ரிலீஸில் இடம்பெறுமா அல்லது விலகுமா என்று இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும் .
0 Comments