நாளை வெளியாகும் சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ டீசர்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும் "சிக்கந்தர்" படத்தின் டீசர் , இன்று (டிசம்பர் 27 ) சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி வெளியாக இருந்தது , முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவால் , அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்துவதால் , மரியாதை நிமித்தமாக சிக்கந்தர் டீசர் நாளை (2024 டிசம்பர் 28) காலை 11 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தெரிவித்துள்ளார் .
"சிக்கந்தர்" படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பதின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரையுலகில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு 2025 ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
0 Comments