Ticker

6/recent/ticker-posts

Ghilli Re Release 20 April 2024

20  ஆண்டுகளுக்கு பிறகும்  ரீ ரிலீஸிலும் சொல்லியடிக்கும் கில்லி - முன்பதிவில் சாதனை :


17 ஏப்ரல்  2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் , வித்யாசகர் இசையில் , விஜய் , திரிஷா , பிரகாஷ் ராஜ் நடிப்பில் , அதிரடி , காதல் , காமெடி, துள்ளலான பாடல்கள் என  அப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான "கில்லி" திரைப்படம்  20  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் 20  ஏப்ரல்  2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

Ghilli Re-Release


கில்லி ரீ ரிலீசுக்கான முன்பதிவு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் முக்கியமான நகரங்களில் துவங்கியது , முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலே , புது படத்திற்கான முன்பதிவு போன்று  விறுவிறுப்பாக நடைபெற்றது .


சென்னை பிரபல கமலா திரையரங்கில் , முன்பதிவு ஆரம்பமாகி ஒரு மணி நேரத்திற்குள் 2000 இக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக அதன் உரிமையாளர் X தளத்தில் தெரிவித்துள்ளார் , மேலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் தற்போது இரண்டாவது அரங்கிலும் முன்பதிவு துவங்கியுள்ளது .


சென்னை வெற்றி திரையரங்கில் , 6000 இக்கும் அதிகமான முன்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் ,  இதுவரைக்கும் இல்லாத அளவில் ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது எனவும் , தற்போது திங்கட்கிழமைக்கு (2024 ஏப்ரல் 22)  முன்பதிவு துவங்கியுள்ளது , அதன் உரிமையாளர் X தளத்தில் தெரிவித்துள்ளார் ,.

Ghilli Re-Release Trailer : 




Post a Comment

0 Comments