வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்
ஊரின் மூட நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி கோவில் கட்டி அதில் வரும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் வைத்து வாழ்ந்து வருகிறார் சந்தானம், அந்த ஊருக்கு தாசில்தாராக வரும் தமிழ் , சந்தானம் ஊர் மக்களை ஏமாற்றி சம்பாதிப்பதை கண்டுபிடித்து, அவரிடம் தனக்கும் ஓர் பங்கு கேட்கிறார், இருவருக்கும் மோதல் ஏற்பட, கோயிலை மூடவும் நேர்கிறது.
கோயிலை மீண்டும் திறக்க நினைக்கும் சந்தானம் , அதற்கு இடையூறாக இருக்கும் தாசில்தார் மற்றும் ஊர் மக்ககளை சமாளித்து கோவிலை திறந்தாரா என்பதே இந்த வடக்குப்பட்டி ராமசாமி .
சந்தானம் கொஞ்சம் அடக்கி வாசித்து, தனது சக நடிகர்களுக்கு நிறைய இடமளித்து அவர்களது காமெடி காட்சிகளில் கைதட்டல் வாங்கி கொடுத்து படத்தையும் கரை சேர்த்து இருக்கிறார்.
அதிலும் சேசு மற்றும் மாறன் மருத்துவமனை காமெடி, நிழல்கள் ரவி & மொட்டை ராஜேந்திரன் கன்னி வெடி காமெடி, கூல் சுரேஷ் மற்றும் அவரது சகாக்கள் பண்ணும் அட்டகாசம், என சிரிப்பலை தான் திரையரங்குகளில்.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், சந்தானத்தின் ஒன் லைன் காமெடி ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைத்து, 2ஆம் பாதியில் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சேசு, மாறன், மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் காமெடியில் அதகளம் பண்ணியுள்ளனர்.
மொத்தத்தில் இந்த வடக்குப் பட்டி ராமசாமி நகைச்சுவை திருவிழா 🎉
0 Comments