லவ்வர் விமர்சனம் :
லவ்வர் 🎬 இக்கால வாழ்வியல் முறையில் இரு காதலர்களுக்கு இடையே இருக்கும் புரிதல், கோபம், ஆற்றாமை, நிதர்சனம் , ஏமாற்றம் , எதிர்பார்ப்பு, அன்பின் வெளிப்பாடு என அனைத்து தன்மைகளையும் பற்றி சொல்லும் படம் .
மணிகண்டன் , ஶ்ரீ பிரியா கௌரி மற்றும் வரும் துணை கதாபாத்திரங்களாக வரும் அனைவரும் மிகையல்லாத இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்.
மனதை வருடும் சீன் ரோல்டனின் பின்னணி இசை, மற்றும் யதார்த்தமான பிரபு ராம் வயாஸ் இயக்கம் என படம் முதல் பாதி நன்றாக இருக்கிறது.
இரண்டாம் பாதியில் நாயகியின் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் நாயகன், முதல் பாதியில் என்ன செய்தாரோ அதையே திரும்ப திரும்ப செய்து கிளைமாக்ஸ் எப்போ வரும் என கொட்டாவி விட வைக்கிறார்.
மேலும் மது, போதை பொருட்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சென்சார் செய்யப்பட கெட்ட வார்த்தைகள், கொஞ்சம் அதிகம் படத்தில்.
இன்னும் கொஞ்சம் இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து அல்லது சொல்லவந்த கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக காட்சியமைத்து (திரும்ப திரும்ப இருவரும் சண்டை போடுவதை தவிர்த்து) சொல்லி இருக்கலாம்.
மற்றபடி இக்கால காதலில் காதலர்களுகிடையே உள்ள இயல்பான பிரச்சினைகளை சொல்லிய விதத்தில் இந்த லவ்வர் .. ஓகே ✅
0 Comments