49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படங்களை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி " ஒத்த ஓட்டு முத்தையா" என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தினை சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்க, சாய் சித்தார்த் விபின் இசையில் , ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் , ராஜகோபால் இயக்குகிறார். படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
படம் குறித்து இயக்குநர் ராஜகோபால் கூறியதாவது : “ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது உடனே சம்மதம் தெரிவித்தார். அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
0 Comments