ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இசை மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பற்றி மனம் திறந்த சந்தோஷ் நாராயணன் .
2014 ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் எட்டு ஆண்டுகளுக்கு பின் இயக்கவுள்ளதாக அறிவிப்பை முன்னதாக வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ் . 'ஜிகர்தண்டா டபுள் X' என்று பெயரிடப்பட்டுள்ள ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் நம் மனசுக்கு நேர்மையாக இருக்கனும், நாம் ஜிகர்தண்டா 2 படம் செய்தால் அதை சரியாக செய்ய வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். அதன்பின் ஒருநாள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தோட கதையை கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் சொன்னார், அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. நிறைய இசைக்கான வேலை இருக்க கூடிய கதையாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த இசை இந்த படத்திலும் தொடரும், அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய புதிய இசையும் இதில் இருக்கும். பழங்குடியினர் இசை போல் உதாரணமாக பிளாக் பாந்தர் படம் போல் இந்த படத்தின் இசை சாரம் இருக்கும், அதனால் அந்த படம் குறித்து நான் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றேன். " என்றார்.
0 Comments