இந்தியன் ரா ஏஜென்டா இருக்கும் வீர ராகவன் #Vijay, படத்தோட துவக்கத்துல தீவிரவாத தலைவன பிடிக்க போகும் போது, இவர அறியாம ஒரு சம்பவம் நடந்துறுது. அந்த சம்பவத்தால மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அத்துடன் பதவி விலகி , சென்னையில் நாயகி பூஜா ஹெக்டே உதவியுடன் VTV கணேஷ் நடத்தும் செக்யூரிட்டி வேலையில் சேர்கிறார் , VTV கணேஷ் எடுத்து நடத்தும் ஷாப்பிங் மால் ஒன்றின் செக்யூரிட்டி சர்வீஸ் சிக்கல் ஆகவே , அதை சரி செய்ய மூவரும் ஷாப்பிங் மால் செல்கிறார்கள் , அப்போது அந்த மால் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. தீவிரவாதிகள் ஏன் ஷாப்பிங்மாலை சிறைபிடித்தார்கள் ? அங்குள்ள மக்களை நாயகன் வீர ராகவன் எப்படி காப்பாற்றினார் என்பதே இந்த பீஸ்ட்.
விஜய் வழக்கம் போல கொஞ்சம் ரொமான்ஸ், அதிரடியான சண்டை, அசத்தலான நடனம் என மாஸ் ஹீரோவுக்கான அனைத்து ஏரியாவிலும் கில்லியடிக்கிறார் .
நாயகி பூஜா ஹெக்டே மசாலா படத்திற்கு உரிய இரண்டு பாடல், ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார் .
ரெடின் கிங்ஸ்லி , யோகி பாபு , கிளி , VTV கணேஷ் என காமெடி பட்டாளம் இருந்தும் காமெடி பெரிதாக இல்லை , VTV கணேஷ் மட்டும் சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் .
அரபிக் குத்து , ஜாலியோ ஜிம்கானா பாடல்களின் ஜானியின் நடனமைப்பு , ஆட்டம் போட வைக்கும் அனிருத்தின் இசை, கலர் புல் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி சண்டை காட்சியமைப்பு, ஆர்ட் டைரக்டர் கிரணின் செட் என டெக்னிக்கல் டீம் அவர்களின் பங்களிப்பை மிரட்டலாக செய்துள்ளனர் .
ஆனால் படத்தை துவம்சம் செய்ததே திரைக்கதை தான் - ஓர் மால் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்துள்ளனர் - அங்கு மாட்டிக்கொண்ட மக்கள் எப்படி தப்பிக்க போகிறோம் என்ற பதட்டம் நம்மிடம் ஏற்பட வேண்டும் , ஆனால் அவர்கள் எதோ பிக்னிக் வந்தது போல உக்காந்து இருக்கிறார்கள் , தீவிரவாதிகள் என்று மாலில் இருப்பவர்களும் ஏதும் புத்திசாலித்தனமாக செய்யாமல் , நாயகனின் கையால் செத்து மடிகிறார்கள் , அதிலும் ஒரு தீவிரவாதியை பேசியே நாயகன் தன் பக்கம் சேர்ப்பது மற்றும் ஒற்றை ஆளாக நாயகன் பாகிஸ்தான் வரை சென்று தீவிரவாதியை பிடித்து வருவது அடேங்கப்பா ! முடியல !
வலு இல்லாத திரைக்கதை & வில்லன் , பொறுமையை சோதிக்கும் பல காட்சியமைப்பு என படத்தில் நெகட்டிவ் தான் அதிகம். விஜய் க்காக கதை எழுதிய இயக்குனர் நெல்சன் மற்ற எல்லாவற்றிலும் கோட்டைவிட்டுள்ளார் !
மொத்தத்தில் : இந்த பீஸ்ட் - எனர்ஜி லாஸ்
0 Comments