தர்பார் விமர்சனம் : Darbar Movie Review
மும்பையில் நடக்கும் போலீஸ் அதிகாரிகள் கொலை , சிறு & இளவயது பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடு படுத்துவது மற்றும் போதை பொருட்களை விநியோகம் செய்யும் கும்பல்களை களையெடுக்க சிறப்பு அதிகாரியாக வரும் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினிகாந்த்) எடுக்கும் அதிரடி முடிவுகள் , இதனால் அவர் வாழ்க்கையில் நிகழும் பாதிப்பு இதே தர்பார் .
ரஜினிகாந்த் - மாஸ் , நடனம் , சண்டைக் காட்சிகள் மற்றும் ஸ்டைல் இல் இன்னும் அதே சுறுசுறுப்புடன் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார் .
யோகிபாபு - ரஜினிகாந்த் இடையேயான நகைச்சுவை மற்றும் நிவேதா தாமஸ் - ரஜினிகாந்த் இடையேயான தந்தை - மகள் பாசம் & சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
மும்பையில் சமூக விரோதிகளை களையெடுக்க ரஜினிகாந்த் எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகள், காமெடி, ஆக்ஷன் என முதல் பாதி ஜெட் வேகத்தில் & சிறப்பாக உள்ளது.
இடைவேளைக்கு பின் வரும் ரஜினிகாந்த் - நிவேதா தாமஸ் சென்டிமென்ட் காட்சியை தவிர்த்து , மாஸ் & பழி வாங்கும் கதையில் வரும் வில்லன் கதா பாத்திரம் நடுங்க வைக்க வேண்டும் , ஆனால் இதில் வில்லனான சுனில் ஷெட்டி பாத்திரப் படைப்பு டம்மி யானதால் இரண்டாம் பாதி விறுவிறுப்பு இல்லை , யூகிக்க கூடிய வகையில் சுவாரஸ்யம் இல்லாமல் நகரும் கதை மற்றும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமான சண்டைக் காட்சியுடன் சுபம் போடுகிறார்கள்.
நயன்தாரா வுக்காக ஒரு பாடல், மனித உரிமை கழக அதிகாரி மற்றும் உள்துறை அமைச்சரை ஐ. பி.எஸ் அதிகாரியான ரஜினி மிரட்டுவது, ரொம்ப மசாலாதனமா சண்டைக் காட்சிகள் என வரும் லாஜிக் மீறல் காட்சிகள் இது முருகதாஸ் படமா என கேட்க வைக்கிறது.
அனிருத் இசையில் சும்மா கிழி பாடல் அதகளம் , சண்டைக் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளில் பின்னணி இசை அதிரடி.
ரஜினிக்காக எடுத்த மெனக்கெடலை கதையிலும் ஏ.ஆர். முருகதாஸ் செலுத்தி இருந்தால் தர்பார் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்
மொத்தத்தில் : இந்த தர்பார் முதல் பாதி சிறப்பு, இரண்டாம் பாதியை பார்க்க மிக பொறுமை மற்றும் லாஜிக் பற்றி யோசிக்க கூடாத தன்மை வேண்டும். மற்றபடி ரஜினிக்காக கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் (3/5).

0 Comments