Ticker

6/recent/ticker-posts

Sanga Thamizhan Movie Review

சங்கத்தமிழன் விமர்சனம் :



சென்னையில் தனது நண்பனுடன் (சூரி) , சினிமாவில் பெரிய காமெடியனாக வர. வேண்டும் என்று சுற்றும் முருகன் (விஜய் சேதுபதி ), நாயகி ரஷி கண்ணாவை பார்த்து காதல் கொள்கிறார், மும்பையில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் ரஷி கண்ணாவின் தந்தை, விஜய் சேதுபதியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது ஏன் ? இருவருக்குமான பிரச்சினை என்ன ? அது எப்படி தீர்ந்தது என்பதே இந்த சங்கத்தமிழன்.

விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியில் பன்ச் வசனம், காமெடி மற்றும் ஆக்ஷனில் படம் முழுவதும் ஒற்றை ஆளாய் அசரடிக்கிரார் , இவருடன் இணைந்து சூரி செய்யும் காமெடி ஓக்கே ரகம் !

ரஷி கண்ணா மசாலா படத்துக்கு உண்டான நாயகியாக - நாயகனை சுற்றி வருவது மற்றும் பாடல் காட்சிகளில் வந்து போகிறார். நிவேதா பெதுராஜ் க்கும் நடிக்க அவ்வளவு வாய்ப்பில்லை.

விவேக் - மெர்வின் இசையில் பாடல்களில் ஒன்று கூட கேட்க்கும் ரகம் இல்லை , படத்துக்கு பெரிய வேகத் தடை.

அனல் அரசுவின் சண்டை காட்சி அமைப்பு மற்றும் வேல் ராஜின் ஒளிப்பதிவு தான் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன.

முதல் பாதி ஏற்கனவே பல பழைய மாஸ் படங்களில் பார்த்த நாயகனுக்கான சண்டைக் காட்சி அடுத்து அறிமுக பாடல் , அப்புறம் காதல், பாடல், காமெடி - இடைவேளையில் ஒரு சண்டை காட்சி - நாயகன் யார் தெரியுமா என்ற அரத பழசான டுவிஸ்ட் என முடிகிறது. ஆனால் இதை பொறுத்துக் கொண்டால் போரடிக்காமல் செல்கிறது.

இடைவெளிக்கு பின் நாயகன் பிளாஸ் பேக், இறுதியில் ஒரு சண்டை காட்சி வைத்து சுபம் போடுகிறார்கள் .

விஜய் சேதுபதியை மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய இயக்குனர் விஜய் சந்தர், திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த #சங்கத்தமிழன் ஏற்கனவே பல படங்களில் அடித்து துவைத்த
கமர்சியல் விருந்து..! (2.5/5)

Post a Comment

0 Comments