Ticker

6/recent/ticker-posts

Enai Nokki Paayum Thotta Movie Review

எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம் : ENPT - Enai Nokki Paayum Thotta Movie Review :


கல்லூரியில் படிக்கும் ரகு (தனுஷ் ) , அங்கு படப்பிடிப்பிற்கு வரும் லேகா (மேகா ஆகாஷ்) மீது காதல் கொள்கிறார் , இருவருக்கும் இடையே வரும் காதல் ஏற்பட்டு பின் பிரிகிறார்கள் , சில வருடங்களுக்கு பின் ரகுவை தொடர்பு கொள்ளும் லேகா உன் அண்ணன் (சசி குமார் )  இங்கு (மும்பை ) பெரிய பிரச்சனையில் மாட்டியுள்ளார் என்று கூறுகிறார் , அண்ணனை தேடி மும்பை செல்கிறார் ரகு, அண்ணன் என்ன பிரச்சனையில் சிக்கினார் ? , அண்ணனை ரகு மீட்டாரா ? லேகாவுடன் காதல் என்னானது என்பதே இந்த  எனை நோக்கி பாயும் தோட்டா !

தனுஷ் காதல் , ஆக்சன், ரொமான்டிக் என அனைத்திலும்  தனக்குரிய நடிப்பில் கவுதம் மேனன் படத்திற்கு உரிய நாயகனாக  மாறி கவர்கிறார் .

மேகா ஆகாஷ் அழகு புதுமையாக , காதல் மற்றும் முத்தக்  காட்சிகளில் தாராளம் காட்டியுள்ளார் . தனுஷ்  மற்றும் இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் இளைஞர்கள் மனதை தாக்கும் தோட்டா  .

வழக்கமாக கிராம படங்களில் பார்த்த சசிகுமார் , இதில் முற்றிலும் மாறி தனுஷின் அண்ணனாக புதுமையான லுக் மற்றும்  நடிப்பில் அசத்தியுள்ளார் . மற்றும் வில்லனாக வரும் செந்தில் ராமசாமி கவனிக்க வைக்கிறார் 

படத்திற்கு பெரும் பலம் மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு மற்றும் தர் புர்கா இசை தான் - மேஜிக் பண்ணியுள்ளது , ஆனால் ஒலியாக கேட்ட மறு வார்த்தை பேசாதே பாடல் பார்க்கும் போது கொஞ்சம் ஏமாற்றம் தான் .

முதல் பாதி (இடைவேளை வரை ) காதல் , ரொமான்ஸ் , அடுத்தடுத்து வரும் பாடல்கள் என்று விறுவிறுப்பாக செல்கிறது , இரண்டாம் பாதியில் மும்பையில் போலீஸ் - கேங்ஸ்டர்  கதைக்குள் செல்லும் போது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் அடுத்து எங்கெங்கோ வேறு திசையில் பயணிக்கிறது , படத்தின் கதையை பின்னணியில் தனுஷ் காக்க காக்க மாதிரி சொல்வது ஓர் நிலைக்கு பின்  பன்ச் வசனங்களாக ஓவரா பேசிக் கொண்டு இருப்பது போரடிக்கிறது .

காதல், ரொமான்டிக் , பாடல்கள், ஆக்சன் மற்றும் மேக்கிங் இல் சிக்ஸர் அடித்த கவுதம் மேனன் , இரண்டாம் பாதி மற்றும் திரைக்கதையில்  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த தோட்டா இன்னும் நன்றாக பாய்ந்து இருக்கும் .

மொத்தத்தில் இந்த எனை நோக்கி பாயும் தோட்டா :  இளைஞர்களை கவரும்  - ரொமான்டிக் மற்றும் ஆக்சன் திரில்லர் . (3.5/5)

Post a Comment

0 Comments