Ticker

6/recent/ticker-posts

Aditya Varma Review


ஆதித்ய வர்மா  விமர்சனம்:

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் (நாயகி), சீனியர் (நாயகன் ) இருவருக்குமிடையே வரும் காதல்,  இருவருக்குமிடையே உள்ள ஈகோ , வெவ்வேறு சாதி என்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றைகளை கடந்து இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா  என்பதே இந்த ஆதித்யா வர்மா!

ஆதியாக விக்ரமின் மகனான  துருவ் , தோற்றத்திலும் , குரலிலும் , முக பாவனைகளில் விக்ரமின் அதே சாயல் , காதலனாக கொஞ்சுவதிலும் , காதலிக்காக வீட்டில் எதிர்த்து நிற்பதிலும், தனக்கு பிடித்ததை செய்யும் தைரியசாலியாகவும் மற்றும்  கோபப்படுவதிலும்  தனது துறு துறு  நடிப்பால்  வசீகரிக்கிறார் !  தமிழ் சினிமாவிற்கு அடுத்து ஓர் நாயகன் ,

பெரிய கண்கள் , இயல்பான சிரிப்பு , உருகி காதலிக்கும் நாயகி (பனிதா) முதல் பாதியில் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு ,  நடிப்பில் ஓரளவிற்கு பூர்த்தி செய்கிறார் , ஆனால் எல்லோரும் அரங்கில்  முனு முனுத்தது நாயகியாக வேற யாரையாவது போட்டு இருக்கலாம் என்று தான் .

துருவ் நண்பனாக அன்பு தாசன் உற்ற துணையாக வருகிறார், மேலும் அப்பாவாக கடலோர கவிதைகள் ராஜா, வக்கீலாக பக்ஸ்,   பாட்டியாக லீலா தாம்சன் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள் . பிரியா ஆனந்த் ரியல் நாயகியாக சில  காட்சியில் வந்து போகிறார் .

ராதான்  இசையில்  பாடல்கள் கேட்பதை விட படத்தின் காட்சியமைப்புகளுடன் பார்ப்பதில் ரசிக்க வைக்கிறது , மேலும் படத்தின் பின்னணி இசை அபாரம் !  ரவி .கே .சந்திரனின் ஒளிப்பதிவு இளமை துள்ளல் !

முதல் பாதி வரை காதல் , மோதல் , நகைச்சுவை என்று சுவாரஸ்யமாக நகரும் கதை.,   சொல்ல வந்த (சாதி மற்றும் காதல் ) பிரச்சனையை பற்றி பேசாமல்  அதிகப்படியான  மது, போதை பொருள் காட்சிகள் வைத்து நிரப்பி இருக்கிறார்கள், மேலும் படத்தின் நீளம் , படத்துடன் ஒன்ற முடியாத  மித வேகமாக நகரும்  காட்சிகள்  என  இடைவேளைக்கு பின் தடுமாறுகிறது

எந்த மாற்றமும் இல்லாமல் அர்ஜுன் ரெட்டியின்  அச்சு அசலாகவே ஆதித்யா வர்மா வை  கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கிரீசாயா .

மொத்தத்தில் இந்த ஆதித்ய வர்மா - (எ) ல்லோரும் (குடும்பத்துடன்) பார்க்கும் படி இல்லையென்றாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் ! (3/5).

Post a Comment

0 Comments