Ticker

6/recent/ticker-posts

Action Tamil Movie Review


ஆக்‌ஷன் - விமர்சனம்

தமிழ் நாட்டில் முதல்வராக இருக்கும் பழ .கருப்பையா , அவரது மகன்களான ராம்கி (துணை முதல்வர்) , விஷால் (இராணுவ அதிகாரி) , இவர்களின் கட்சி மாநாட்டிற்கு வரும் மத்திய தலைவர் ஒருவர் குண்டு வைத்து கொல்லப் படுகிறார். கொலைப் பழி விஷால் தந்தை & அண்ணன் மீது விழுகிறது.

தன் குடும்பத்தின் மீது ஏற்பட்ட களங்கத்தை போக்க , குண்டு வைத்த குற்றவாளி யார் என கண்டுபிடிக்க விஷால் எடுக்கும் அதிரடி தான் இந்த ஆக்சன் .

விஷால் : எப்போதும் விறைப்பான முகத்துடன் இராணுவ அதிகாரியாக  கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது, பறப்பது, ஓடுவது என படத்தின் தலைப்புக்கு ஏற்ப சண்டை காட்சிகளில் இறங்கி அடித்து இருக்கிறார்.

அறிமுக காட்சியில் விஷாலுடன் சேர்ந்து சண்டை காட்சியில் அசத்தும் தமன்னா இரண்டாம் பகுதியில் கவர்ச்சி மற்றும் பாடல் காட்சிக்காக பயன்படுத்தப் பட்டுள்ளார்.

கொலை காரியாக வரும் அக்ஷனா புரி கவனிக்க வைக்கிறார், 2 காட்சிகளில் வரும் யோகி பாபு திரையரங்கில் துவண்டு போய் இருக்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

உலகமே தேடப்படும் தீவிர வாதியாக வரும் கபீர் பில்டப் மட்டும் தான் மற்றபடி இறுதியில் டம்மி யாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் பெரும் ஏமாற்றம் , பின்னணி இசையில் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளார்.

டட்லி ஒளிப்பதிவு துருக்கி , பாகிஸ்தான், லண்டன், இஸ்தான் புல் ஆகிய நாடுகளை மற்றும் சண்டை காட்சிகளை படம் பிடித்த விதத்தில் நச்.

படம் பார்ப்பவர்களுடன் ஒட்டாத/ தாகத்தை ஏற்படுத்தாத காட்சியமைப்பு மற்றும் வசனம் , இரண்டாம் பாதி சண்டை காட்சிகளின் நம்ப முடியாத தன்மை, பல லாஜிக் மீறல்கள், பொறுமையை சோதிக்கும் பாடல்கள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் என குறைகளே அதிகம் .

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழு நீள ஆக்ஷன் படம் கொடுக்க முயன்றுள்ள இயக்குனர் சுந்தர் . சி இக்கு இது சறுக்கல் தான்.

மொத்தத்தில் இந்த ஆக்‌ஷன் - வேகம் குறைவு .(2/5)

Post a Comment

0 Comments