Ticker

6/recent/ticker-posts

Bigil Movie Review | Tamil

பிகில் விமர்சனம் :


சென்னையில் ஓர் ஏரியாவில் கெத்தா , காதலுடன் உலாத்தி வரும் மைக்கேல் (விஜய்), அந்த ஏரியா பெண்களின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருக்கும் கதிர் -, எதிர்பாராத விதமாக வில்லனால் தாக்கப்பட , மைக்கேல்  எப்படி  அந்த பெண்கள் அணியை வழி நடத்தி  கோப்பை கனவை நிறைவேற்றினார் என்பதை இந்த பிகில் .

விஜய் : மைக்கேலாக காதல் , ஆக்ஷன், நகைச்சுவை என துறு துறு நடிப்பிலும் , ராயப்பனாக பாசமிகு தந்தையாகவும் , அதிரடி தாதாவாகவும் கவர்கிறார்.

நயன்தாரா வழக்கமான நாயகியாக ஒரு பாடல் மற்றும் படம் முழுவதும் வந்து போகிறார்.

யோகி பாபு சில இடங்களில் தனது பன்ச் வசனத்தால் சிரிக்க வைக்கிறார் , மேலும் கதிர் ,  இந்து ஜா , டேனியல் பாலாஜி , ஜாக்கி ஷெராப் , ஆனந் ராஜ் , ராயப்பனுடன் எப்போதும் இருக்கும் நபர்கள் மற்றும்  பெண்கள் அணி கதா பாத்திரங்கள் என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம் .

ஏ .ஆர் .ரஹ்மான் இசையில் வெறித்தனம் ஆட்டம் போடவும் , சிங்கப் பெண்ணே ஊக்கமளிக்கும் , பின்னணி இசை கொஞ்சம் நழுவல் தான் .

ஜி ,கே .விஷ்ணுவின் கேமரா புட் பால் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளது

முதல் பாதி வரை எங்கு எங்கையோ சுற்றி திணறடிக்கும் கதை , பல வழக்கமான விளையாட்டு சம்பந்தமான  படங்களில் பார்த்த ,  யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள் என  தடுமாறுகிறது,

ஆனால் இரண்டாம் பாதியில் தான் அட்லீ - விஜய் மேஜிக் ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது , பெண்கள் கால் பந்து அணிக்கு கொடுக்கும் ஊக்கம் , வில்லனுடனான ஆடு புலி ஆட்டம் என விஜய் தனக்குரிய களத்தில் அதகளம் பண்ணுகிறார் . அதிலும் கால் பந்து அணிக்கு திரும்ப வர அமிர்தா வுடன்  பேசும் வசனம் நச்.

மொத்தத்தில் பிகில் - தெறி, மெர்சல் அளவு இல்லாவிட்டாலும் , முதல் பாதி விஜய் ரசிகர்களையும்  , இரண்டாம் பாதி அனைவரையும் ஈர்க்கும் . 

பார்க்கலாம் (3/5).

Post a Comment

0 Comments