சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம் : Sivapu Manjal Pachai Movie Review
சிறு வயதிலேயே தாய் , தந்தையை இழந்த லிஜோ மோல் ஜோஸ் - ஜி.வி.பிரகாஷ் ஒருவருக்கொருவர் அளவு கடந்த பாசத்துடன் மற்றும் எதிலும் விட்டுக் கொடுக்காத அக்கா - தம்பியாக , அத்தையின் கவனிப்பில் தனியாக வாழ்கிறார்கள் .
பெரியவனான பின் கள்ளத்தனமான பைக் ரேஸ் போவதில் ஆர்வமான ஜீ.வி. பிரகாஷ் , ஒரு சமயத்தில் பைக் ரேஸ் போகும் போது டிராபிக் இன்ஸ்பெக்டரான சித்தார்த் மூலம் பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகிறார்.
அதிலிருந்து சித்தார்த் மீது தீரா கோபத்தில் இருக்கிறார் ஜி வி , பின் எதிர்பாராத சூழ்நிலையில் தனது அக்காவுக்கு பார்க்கும் மாப்பிள்ளையாக சித்தார்த் வர, தம்பியின் எதிர்ப்பையும் மீறி அவரை கரம் பிடிக்கிறார் அக்கா லிஜோ மோல், இதனால் ஜி.விக்கு மாமனாகும் சித்தார்த்தின் மீது கோபம் தீர்ந்ததா ? அவரை பழி வாங்கினாரா அல்லது ஏற்றுக் கொண்டாரா என்பதே இந்த சிவப்பு மஞ்சள் பச்சை கதை.
ஜி. வி அக்கா மீது பாசத்தை காட்டுவதிலும் தனது மாமன் மீது வெறுப்பை காட்டுவதிலும், பைக் ரேஸ் விடும் இளைஞனாகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பு மெருகேறி இருக்கிறது .
சித்தார்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், மனைவியை கொஞ்சுவதிலும் & மச்சானுடன் மோதுவதும் , இறுதியில் விட்டு கொடுக்க முடியாமல் தவிப்பதிலும் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
தமிழுக்கு அறிமுகமாகியுள்ள லிஜோ மோல் ஜோஸ் மிகையில்லாத நடிப்பு , நல்வரவு . ஜி .வி க்கு நாயகியாக காஸ்மிரா , ஜிவி - லிஜோ மோல் ஜோஸ் அத்தையாக வருபரின் நடிப்பும் அருமை .
பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு , சித்து குமாரின் இசை , ஷான் லோகேஷ் எடிட்டிங் படத்திற்கு வேகம் மற்றும் அழகை கொடுத்துள்ளது ,
ரேஸ், உறவுகளை பற்றி முதல் பாதி வரை விறுவிறுப்புடன் செல்லும் கதை , இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட வில்லன் கதா பாத்திரத்தால் திசை மாறி கொஞ்சம் தடுமாறுகிறது . மேலும் ரேஸ் காட்சிகளில் சி .ஜி வேலை மற்றும் வழக்கமான கிளைமாக்ஸ் கொஞ்சம் உறுத்துகிறது
பிச்சைக்காரன் படத்தினை அடுத்து சசி இயக்கி இருக்கும் இப்படத்தில் அக்கா -தம்பி , கணவன் - மனைவி , மாமன் - மச்சான் உறவுகளை பற்றி அழகாக எடுத்திருக்கிறார் .
இரண்டாம் பகுதியில் சிறு குறைகள் இருந்தாலும் , விரசம் இல்லாத வசனங்கள் மற்றும் காட்சிகளின்றி அழகாக உறவுகளை காட்டியதில் இந்த "சிவப்பு மஞ்சள் பச்சை" யை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். (3.5/5).
0 Comments