Ticker

6/recent/ticker-posts

Kaapaan Movie Review

காப்பான் விமர்சனம் :

தஞ்சாவூர் பகுதியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த நாயகன் கதிர் ( சூர்யா) , பட ஆரம்பத்தில் ஓடும் ஒரு ரயிலுக்கு மற்றும் பாதுகாப்பு கிடங்குக்கு வெடி குண்டு வைக்கிறார், அது ஏன் ? அவர் யார் ? என பிளாஷ்பேக்கில் விவரிப்பதே இந்த காப்பான்.

சூர்யா முறுகேற்றிய உடல் மற்றும் விறைப்பான முகத்துடன் துப்பறிவதிலும் , சண்டைக் காட்சிகளிலும் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.

மோகன்லால் தன் அனுபவ நடிப்பால் அந்த பிரதமர் கதா பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

ஆர்யா மற்றும் சமுத்திரக்கனி வழக்கமான நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகி அவ்வப்போது சிரிப்பு ஊட்டவும் பயன்பட்டு இருக்கிறார்கள்.

மசாலா படத்தில் வரும் வழக்கமான நாயகி வேடம் சாய்ஷா வுக்கு சில காட்சிகள் மற்றும் பாடல்களில் வந்து போகிறார்.

முதல் பாதி கதையில் பல முடிச்சுகளை போட்டு - யார் தான் வில்லன் என எல்லோரையும் குழப்ப வைத்து , கே.வி. ஆனந்த் ஸ்டைலில் திருப்பங்களை அழகா அவிழ்ப்பதால் இரண்டாம் பகுதி படத்தினை காப்பாற்றுகிறது.

ஆங்காங்கே வரும் விவசாய மற்றும் நாட்டுப் பற்று பற்றிய வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசையில் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளார்.

படத்தின் பெரிய குறை - கதை எதை நோக்கி போகிறது என்ற குழப்பம் தான். இது விவசாயப் பிரச்சினைகளை பற்றி பேசும் படமா ? கார்பெட் முதலாளிகளின் முகத்திரையை கிழிக்கும் படமா? அரசியல் படமா? தீவிரவாதத்தை பற்றி பேசும் படமா ? காஷ்மீர் பிரச்சினையை பற்றி பேசும் படமா என்று தடுமாற வைப்பதே.

ஆனால் இதையெல்லாம் யோசிக்காமல் ஓர் விறு விறுப்பான (இரண்டாம் பகுதி), திருப்பங்களை மற்றும் ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

மொத்தத்தில் - ஒரே படத்தில் தான் இதற்கு முன் கே. வி. ஆனந்த் எடுத்த கோ, அயன், மாற்றான், கவண் படங்களில் இருந்து அரசியல், அறிவியல், ஆக்சன் கருவை எடுத்து இதில் விவசாய பிரச்சினையையும் சேர்த்து கொடுத்த விறு விறுப்பான காக்டெய்ல் இந்த காப்பான். (3/5)

Post a Comment

0 Comments