Ticker

6/recent/ticker-posts

Sindhubaadh Movie Review

Vijay Sethupathi , Anjali Starred Sindhubaadh Tamil Movie Review :

சிந்துபாத் விமர்சனம் :

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படத்தினை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் மூன்றாவதாக விஜய் சேதுதபதியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வரும் வெண்பா (அஞ்சலி) விடுமுறைக்கு சொந்த ஊர் தென்காசி க்கு வருகிறார், இங்கு நியமான திருட்டு (ஹீரோ ல) மற்றும் ஊருக்குள் அலப்பறை பண்ணும் திரு (விஜய் சேதுபதி ) , இவர்களுக்கு இடையில் காதல் வருகிறது, பின் சம்பாதிச்ச காசை வாங்கிவிட்டு வருகிறேன் என்று அஞ்சலி மீண்டும் மலேசியா செல்கிறார் , அங்கு ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் , என்ன பிரச்சனை , அதில் இருந்து அஞ்சலியை எப்படி மீட்டார் விஜய் சேதுபதி என்பதே சிந்துபாத் கதை..!

விஜய் சேதுபதி வழக்கம் போல தனது உழைப்பினை கொடுத்து படத்தை தாங்குகிறார்,

அஞ்சலி - வாயாடி பெண்ணாக முதல் பாதியில் அசத்துகிறார்.

விஜய் சேதுபதி மகன் படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வருகிறார், முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாதியில் வரும் விஜய் சேதுபதி - அஞ்சலி க்கு இடையேயான காதல் காட்சிகள் , விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் பண்ணும் காமெடி & அலப்பறை வழக்கமானதாக இருந்தாலும் ரசிக்கும் படி உள்ளது.

முதல் பாதி வரை நன்றாக சென்ற காட்சிகள், இடைவேளைக்கு பின் எங்கு நோக்கி செல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது.

பலம் வாய்ந்த வில்லனை விஜய் சேதுபதி அசால்ட்டாக வீடு புகுந்து தாக்குவது, அப்புறம் பலம் வாய்ந்த வில்லனை டம்மியாக்குவது, விஜய் சேதுபதி - அவரது கூடவே இருக்கும் மகன் இருவருக்கும் என்ன உறவு என்று புரியாதது, அதிரடி திருப்பங்கள், மாஸ் காட்சிகள் இப்படி மாசாலா கதைக்கு ஏற்ற எதுவும் இல்லாமலும், திரைக்கதையிலும் வலு & விறு விறுப்பு இல்லாமல் இருப்பதால் இரண்டாம் பாதி சோதிக்கிறது .

யுவனின் இசையில் பாடல்கள் கை கொடுக்கவில்லை. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு நேர்த்தி.

மொத்ததில் இந்த சிந்துபாத் :

முதல் பாதி கல கல , இரண்டாம் பாதி படுசுமார். (2.5/5) 

Post a Comment

0 Comments