கீ விமர்சனம் :
ஒருவருடைய மொபைல் , லேப்டாப் அல்லது பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களை ஹேக்கிங் செய்து அவர்களது அந்தரங்களை வைத்து மிரட்டி பிறரை கொலை செய்யச் சொல்வது, அதனை செய்யாவிடில் அவர்களே தற்கொலை செய்துகொள்ளும் படி செய்து ரசிக்கிறது வில்லன் கும்பல். இவர்களுக்கும் நாயகன் ஜீவா (ஹேக்கர்க்கும்) நடைபெறும் டிஜிட்டல் யுத்தமே இந்த 'கீ'.
ஜீவா தன் இயல்பான நடிப்பிலும், வில்லன் பத்ம சூர்யா அலட்டல் இல்லாத நடிப்பிலும் தங்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
நிக்கி கல்ராணி , அனைகா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி இவர்கள் எல்லோரும் படத்தில் இருக்கிறார்கள் , இவர்களில் யாரும் மனதில் நிற்கும் படியான கதா பாத்திரம் இல்லை.
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கை கொடுக்கா விட்டாலும் பின்னணி இசையில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.
நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களால் ஏற்படும் மறைமுக பாதிப்பை / ஓர் விழிப்புணர்வை சொல்ல வந்ததில் அறிமுக இயக்குனர் காளீஸ்க்கு பாராட்டுகள்.
ஆனால் ஹேக்கிங் என்ற கதைக்களத்தினை விவரிக்க வந்து தேவையற்ற (அம்மா-அப்பா சென்டிமென்ட், காதல் மற்றும் கில்மா காட்சிகள் என்று இதில் சேர்த்து திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார் ..
மொத்தத்தில் கீ :
இந்த மாதிரி அறிவியல் சார்ந்த கதைகளுக்கு மசாலா ( சென்டிமென்ட், காதல், பாடல்கள், கிளாமர் ) தேவையில்லாத ஆணி தான்.. இதை எல்லாம் தவிர்த்து/ சகித்து கொண்டால் ஒரு முறை இப்படத்தினை பார்க்கலாம்.

0 Comments