Ticker

6/recent/ticker-posts

Viswasam Movie Review Tamil

விஸ்வாசம் விமர்சனம் :

கிராமத்தில் அடிதடி மற்றும் அலப்பறை செய்து வரும் தூக்கு துரை வாழ்வில் நிரஞ்சனா வருகிறார், மோதலில் ஆரம்பித்து பின் திருமணத்தில் முடிகிறது இருவருக்கும். குழந்தை பிறந்த பிறகு தூக்கு துரை அடிதடியால் குழந்தைக்கு பாதிப்பு வர, அவரை விட்டு விட்டு மும்பை சென்று விடுகிறார் நிரஞ்சனா, பத்து வருடம் கழித்து ஊர் திருவிழாவுக்கு மனைவி மற்றும் மகளை கூப்பிட மும்பை செல்கிறார் தூக்கு துரை , அங்கு அவரது மகளை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. தூக்கு துரை - தன் மகளை ஏன் கொலை செய்ய வந்தார்கள்? அவர்கள் யாரென்று கண்டுபிடித்தாரா?, தான் யாரென்று மகளிடம் சொல்லாமல்
, அவளது லட்சியத்தை நிறைவேற்ற என்ன செய்தார் என்பதே விஸ்வாசம் படத்தின் கதை .

தூக்கு துரையாக அஜித் குமார் முறுக்கு மீசையும் , தாடியுடன் முதல் பாதி ரகளை , காமெடி, சண்டை மற்றும் இரண்டாம் பாதியில் மகளின் பாசத்துக்கு ஏங்கும் தகப்பனாக நடிப்பில் அசத்துகிறார் .

நிரஞ்சனாவாக நயன்தாரா அஜித்துக்கு சமமான கேரக்டர், சிறப்பாக செய்துள்ளார், இவர்களின் மகளாக அனிகா சரியான தேர்வு.

தம்பி ராமையா, யோகி பாபு, விவேக் , கோவை சரளா , ரோபோ ஷங்கர் இவ்ளோ பேர் இருந்தும் காமெடி பெரிதாக
ஒர்க் அவுட் ஆகவில்லை.. ஒரு சில இடங்களை தவிர மற்ற எல்லாம் எரிச்சலடைய செய்யும் காமெடி தான். அஜித் இவர்களை விட காமெடி டியில் கலக்குகிறார்.

இமான் பின்னணி இசையில் தெறிக்க விட்டு இருக்கிறார், வானே வானே, கண்ணான கண்ணே பாடல்கள் செம.

வெற்றியின் ஒளிப்பதிவு கலர் புல், திலீப் சூப்பராயனின் சண்டை காட்சி அமைப்பு மாஸ் மற்றும் சிறப்பு. ( குறிப்பாக மழையில் மற்றும் கழிவறையில் நடக்கும் சண்டைக் காட்சி)

ஏற்கனவே பல படங்களில் அடிச்சு துவைத்த கதை , இடைவேளை வரை பொறுமை இருந்தால் அதற்கு பிறகு படம் சிறப்பு. இரண்டாம் பகுதியில் வரும் அந்த தந்தை - மகள் பாசப் பிணைப்பு தான் படத்தை காப்பாற்றி இருக்கிறது. இறுதியில் ஒரு நல்ல கருத்துடன் படம் முடிகிறது.

மொத்தத்தில் :-

உறவுகளுடன் - உணர்வுகளுடன் கூடிய "விஸ்வாசம்" பொங்கல் விருந்து. முதல் பாதி தல ரசிகர்களுக்கும் - இரண்டாம் பகுதி அனைவருக்கும் பிடித்தமாக படமாக இருக்கும்.

(3/5).

Post a Comment

0 Comments