Ticker

6/recent/ticker-posts

Petta Movie Review Tamil

பேட்ட விமர்சனம் :

ரஜினியின் பழைய பாணியில் இருக்குமென டீசர்லே எதிர்பார்ப்பை எகிற வைத்த பேட்ட விமர்சனம்.

கதைக்கு என்று ஏதும் மெனக்கெடாமல் தனக்கு ரஜினியின் கால்ஷீட் கிடைத்து இருக்கிறது, அதனை எப்படி ரஜினி ரசிகர்கள் மற்ற அனைவரும் கொண்டாடும் படி, ரஜினி ரசிகராக பார்த்து பாரத்து , ரசித்து எடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் இந்த பேட்டையை..

ரஜினி காந்த் : ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் பாணியில் துள்ளல், நக்கல், ஆட்டம், சண்டை மற்றும் மாஸ் என்று அதகளம் பண்ணி இருக்கிறார். இப்போதும் கூட அதே சிரிப்பு , நடை, என்று படம் முழுக்க எனர்ஜியுடன் இருக்கிறார். படத்தில் எழுந்து விசில் மற்றும் கைதட்டல் பறக்கும் காட்சிகள் அதிகம்.

விஜய் சேதுபதி & நவாசுதீன் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார்கள். இருவரும் அதிகம் இல்லாமல் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிப்பில் அசத்துகிறார்கள் , மற்றபடி பெரிதாக வேலை இல்லை. சசி குமார், ரஜினியின் நண்பராக வந்து போகிறார் .

சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா எல்லோரும் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இப்படத்தில் சேர்ந்து இருப்பாங்க போல பெரிதாக ஸ்கோர் செய்யும் காட்சிகள் யாருக்கும் இல்லை.

படத்தின் நீளம், யூகிக்க கூடிய திருப்பங்கள் , வலு இல்லாத கதை இதையெல்லாம் தாண்டி படத்தோடு ஒன்ற வைப்பது ரஜினியின் ஒன் மேன் ஷோ, அதற்கு பக்க பலமாக இருப்பது அனிருத் மாஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் , பீட்டர் ஹெய்ன் ஆக்ஷன் மற்றும் திருவின் நேர்த்தியான ஒளிப்பதிவு.

ஆரம்பத்தில் பாக்க தான போற இந்த காளியோட ஆட்டத்தை என்று ஆரம்பித்து, முடிவில் இந்த ஆட்டம் போதுமா கொழந்த என்று ரஜினி கேட்பது - படம் முழுவதும் ரஜினியிஸம் 👌

மொத்தத்தில் இந்த பேட்ட - ரஜினியின் தரமான சம்பவம்  (3.5/5)

Post a Comment

0 Comments