Ticker

6/recent/ticker-posts

Kanaa Movie Review

கனா விமர்சனம் : Kanaa Movie Review

கதை :

விவசாய குடும்பத்தில் பிறந்த கவுசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) , கிரிக்கெட்டில் ஆர்வமான தனது தந்தை (சத்யராஜ்) ஒரு போட்டியில் இந்தியா தோற்றத்தை நினைத்து அழுவதை பார்த்து, தான் வளர்ந்து இந்திய அணியின்  பெண்கள் கிரிக்கெட்டில் சேர்ந்து அப்பாவின் ஆசைய  நிறைவேற்ற கனா காண்கிறார் சிறு வயதில்,  அது ஆசையாக மாறி பின்பு  லட்சியமாக மாறுகிறது.. அதற்காக அவர் சந்திக்கும் குடும்ப பிரச்சினை,  உடல் & மன ரீதியான பிரச்சனைகளை தாண்டி அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா ?  என்பதே கனா படத்தின் கதை !

சத்யராஜ் :

பொம்பள கிரிக்கெட் விளையாடலாமா ? என தன் மகளின் லட்சியத்துக்கு ஊரே எதிர்த்து நின்றாலும் , அவருக்கு துணையாக நின்று பேசும் வசனங்கள் மற்றும் விவசாயம் பொய்த்து போனதால் வங்கியில் கடன் வாங்கி அதை கொடுக்க போராடும் நிலை என தனது கதா பாத்திரத்தில் அழுத்தமாக நிற்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் :

அப்பா மீதான பாசம், படிக்கும் பள்ளியில் பெண்கள் யாரும் கிரிக்கெட் விளையாட வராததால் ஆண்களுடன் விளையாடுவது , அதற்காக அம்மாவின் மற்றும் கிராமத்து மக்களின் எதிர்ப்பை சமாளிப்பது ,   இந்திய அணியில் தேர்வு பெறுவதற்காக பெரும் அவமானங்கள் அதை எதிர்த்து நிற்கும் துணிவு என்று சவாலான கதா பாத்திரத்தை இயல்பான நடிப்பில் கவர்கிறார் .

இளவரசு (சத்யராஜ் மற்றும் குடும்பத்திற்கு ) மற்றும் சிவ கார்த்திகேயன் (ஐஸ்வர்யா ராஜேஷ் ) சோர்ந்து போகும் போது ஊக்கமளிக்கும் கதா பாத்திரத்தில் தங்களது பங்களிப்பை சரியாக செய்து இருக்கிறார்கள் . சில காட்சிகளே வந்தாலும்  கல கலப்பு பண்ணுகிறார் முனிஷ் காந்த் . மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இக்கு சப்போர்ட் பண்ணும் அந்த ஆண்கள் கிரிக்கெட் நபர்களின் நடிப்பு சிறப்பு .

படம் முழுவதும் ஊக்கமளிக்கும் வசனங்கள் ஏராளம் -  பாஸ் , fail எல்லாம் சம்பாதிக்க படிக்கிறவங்கவங்களுக்கு, சாதிக்க போறவங்களுக்கு இல்ல ,

ஆசை பட்டால் மட்டும் போதாது அடம்பிடிக்க தெரியணும் ,

ஆம்பளைங்களோட வக்கிரபுத்திக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்து, பொண்ணுங்களோட தைரியத்தையும் முன்னேற்றத்தையும் கெடுக்காதீங்க

கிரிக்கெட் பிளேயர்ஸ் கூட அவங்க வீட்டுல இருந்து பசங்களைத்தானே கிரிக்கெட் விளையாட அனுப்புறாங்க

இந்த உலகம் ஜெயிச்சிடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்

என்று படம் முழுவதும் ஆங்காங்கே வரும் வசனங்கள் உற்சாக டானிக் மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் விவசாயம் மற்றும் கிரிக்கெட் இரண்டையும் வைத்து பேசும்  வசனங்கள் சிறப்பு .

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்,  தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு அழகு .

படத்தில் சிறிய குறை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தர்ஷன் கொள்ளும் ஒரு தலை காதல் பகுதி - கதையை விட்டு விலகியே தெரிகிறது .

முதல் படத்திலே இயக்கத்தில் அருண் காமராஜ் விவசாயம் மற்றும் கிரிக்கெட் என்ற இரு பக்கங்களின் அரசியல் , மற்றும் பெண்களின் கனவு , அதை தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து இருக்கிறார் .
மேலும் தனது முதல் தயாரிப்பில் ஒரு நல்ல படத்தை கொடுத்து அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் சிவ கார்த்திகேயன் .

கனா - வாழ்வில் இலக்கை அடைய முயற்சிக்கும்  எல்லோருக்கும்  ஊக்கமளிக்கும் படம் . குடும்பத்துடன் ரசிக்கலாம் . (4.5/5)

Post a Comment

0 Comments