Ticker

6/recent/ticker-posts

Chekka Chivantha Vaanam Review | Tamil

செக்கச் சிவந்த வானம் விமர்சனம் :

கதை : பெரியவர் என்றழைக்கப் படும் தாதா சேனாதிபதியை( பிரகாஷ் ராஜ் ) யாரோ சுட்டு விடுகிறார்கள் , அவரை சுட சொன்னவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவும் மற்றும் அவருக்கு பின் அந்த பெரியவர் அரியணையை பிடிக்க அவரது மகன்கள் வரதன் ( அர்விந்த் சாமி) , எத்தி ( சிம்பு) , தியாகு ( அருண் விஜய்) மற்றும் வரதன் நண்பன் ரசூல் ( விஜய் சேதுபதி ) இவர்களுக் கிடையான யுத்தம் தான் இந்த செக்கச் சிவந்த வானம்.

படத்தின் ஆரம்பத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி இவர்களின் கதா பாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப் படுத்துவதில் அழகு மற்றும் ஆரவாரம் திரையரங்கில்.

பிரகாஷ் ராஜ் & அரவிந்த் சாமியின் பக்குவப் பட்ட நடிப்பு, ஸ்டைல் சிம்பு & ஸ்டைல் மற்றும் நெகடிவ் ரோல் அருண் விஜய் , விஜய் சேதுபதி யின் வித்தியாசமான காமெடி நடை என்று ஒவ்வொருவரும் தங்களது கதா பாத்திரத்தில் அசத்தியுள்ளனர்.

நாயகிகளாக ஜோதிகா, ஐஷ்வர்யா ராஜேஷ், இரப்பா , அதிதி ராவ் ஹைடாரி இருந்தாலும் ஜோதிகாவின் பங்கே அதிகம் மற்றும் படத்திற்கு பலம்.

ரஹ்மானின் இசை மற்றும் வைரமுத்து வரிகளில் பாடல்கள் ஏற்கனவே ஹிட், ஆனால் படத்தில் ஆங்காங்கே காட்சிகளுக்கு நடுவே வருவதால் கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் பின்னணி இசையில் பிண்ணியுள்ளார் ரஹ்மான்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கலர் ஃபுல் மற்றும் கேங்ஸ்டர் படத்துக்கான விறு விறுப்பு ..

ஆரம்பம் முதல் இடைவேளை வரை ஜெட் வேகத்தில் செல்லும் கதை , இடைவேளைக்கு பின் கொஞ்சம் தடுமாறுகிறது. மேலும் இது தான் கிளைமாக்ஸ் என்று கணிக்க முடிவதால் இரண்டாம் பாதி சற்று தொய்வு தான்.

சமீப காலங்களில் வெளிவந்த தனது படங்களில் இருந்து முற்றிலும் விலகி, இளைஞர்களை கவரும் வண்ணம் குறிப்பாக அனைவரும் ரசிக்க ,
கமர்சியல் காக்டெய்ல் கதையுடன் களம் கண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் மணி ரத்னம் .

மொத்தத்தில் : இந்த செக்கச் சிவந்த வானம் மாஸ் கமர்சியல் பேக்கேஜ் .

ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்

Post a Comment

0 Comments