காதலும் கடந்து போகும் விமர்சனம் :
சூது கவ்வும் படத்திற்க்கு பிறகு நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் தான் காதலும் கடந்து போகும்.
கதை :
அடியாளாக வேலை செய்யும் விஜய் சேதுபதி, சென்னைக்கு வேலை தேடி வரும் மடோன்னா செபாஸ்டியன் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல், நட்பு , காதல் தான் இந்த க க போ !
My Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவலாக இருந்தாலும், திரைக்கதையால் எங்கும் சலிப்படையாத வகையில் கதையை நகர்த்தி இருப்பது சிறப்பு .
விஜய் சேதுபதி :
ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல அடியாளாக நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக நடித்து இருக்கிறார் . படத்தில் இவர் பேசும் வசனங்கள், முக பாவனைகளாலும் அரங்கம் கைதட்டல்களால் அதிர்கிறது .
அதிலும் பார் மற்றும் இன்டர்வியூ சீனில் கைதட்டல் அள்ளுகிறார் .
மடோன்னா செபாஸ்டியன் :
ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் இதில் யாழினியாக மனதை கவர்கிறார் , அதட்டல் இல்லாத நடிப்பு , அழகு என்று அந்த கதா பாத்திரத்திற்க்கு சரியாக பொருந்தி இருக்கிறார் . கதாநாயகி சுற்றி கதையை அமைத்து இருப்பது சிறப்பு .
ஒளிப்பதிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்க்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது .
இருவருக்கு இடையே நடை பெறும் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்வது சிரமம் தான் என்றாலும் , கல கலப்பாக செல்லும் கதை க்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் ஏமாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது .
ஆனாலும் விஜய் சேதுபதி , மடோன்னா செபாஸ்டியன் நடிப்பால் மனதை கவர்கிறார்கள்,.
காதலும் கடந்து போகும் – ஒரு ஜாலியான காதல் திருவிழா .
0 Comments