Ticker

6/recent/ticker-posts

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்:

பாண்டிய நாடு படத்தின் வெற்றியை அடுத்து விஷால் , லட்சுமி மேனன் நடித்து வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது.

கதை :
விஷால் நார்கொலாப்ஸி என்னும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் , விஷாலுக்கு அதிர்ச்சியான செய்தி கேட்டாளோ அல்லது அதிக அளவு உணர்ச்சிவசபட்டாளோ அல்லது சத்தம் கேட்டாலோ தன்னை அறியாமல் தூங்கி விடுவார் ,இதுதான் நார்கொலாப்ஸி.

இப்படி நோயால் பாதிக்கப்பட்ட விஷாலை காதலிக்கிறார் லட்சுமி மேனன், விஷாலால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதால், இவர்களது காதலை எதிர்க்கிறது லஷ்மி மேனனின் குடும்பம். அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைகிறார்கள் ஒரு கட்டத்தில் லட்சுமி மேனன் வில்லன் கும்பலிடம் மாட்டி கொள்கிறார், அப்போது நார்கொலாப்ஸி நோயின் காரணமாக தூங்கிவிடுகிறார் விஷால் அவர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போகிறது , முழித்து பார்த்தால் லட்சுமிமேனன் கோமா ஸ்டேஜ்க்கு போயிடுறாங்க..அந்த வில்லன் கும்பல் யார் ? எதற்காக இப்படி செய்தார்கள் ? கண்டுபிடித்து , இந்த நோயையும் மீறி எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை.

படத்தின் முதல் பாதி லட்சுமிமேனன் காதல்,ஜெகன் காமெடி என விறு விறுப்பாக செல்கிறது படத்தின் இரண்டாம் பாதி கதை சொல்லவதில் இயக்குனர் தடு மாறி இருக்கிறார் , வில்லன்களில் ஒருத்தனுடைய பெயர் மட்டும் விஷாலுக்கு நியாபகம் இருக்கிறது , அதை வைத்து வில்லன்களின் தலைவரை தேடி அலைகிறார் , இறுதியில் அந்த வில்லனை கண்டு பிடிக்கும் விஷால் , ஏன் அவன் அப்படி விஷாலுக்குப் பண்ணான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது அங்கேயே படத்தின் விறு விறுப்பு குறைந்து விடுகிறது .முகம் சுளிக்க வைக்கும் அளவில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறது

விஷால் :
பாண்டியநாடு படத்தினை போலவே அளவான , ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்ந்து இருக்கிறார், நார்கொலாப்ஸி நோயால் பாதிக்கப்பட்டவராக இயல்பாக நடித்து இருக்கிறார் .அந்த நோயால் வேலை கிடைக்காமல் ஃபீல் பண்றது, லட்சுமி மேனனை லவ் பண்ணும் சீன்ஸ் தூக்க வியாதியினால் ரோட்டில் தூங்கிவிட, விஷாலை அநாதை பிணம் என்று மயில்சாமி செய்யும் அலப்பறை என்று விஷால் கலக்கியிருக்கிறார் .

லட்சுமி மேனன்:
முதல் பாதி விஷாலுடன் - காதல் , பாடல் காட்சி, முத்த காட்சி என நன்றாக நடித்து இருக்கிறார் , சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸில்கூட அசத்துகிறார்,இடைவேளையில் கோமாக்கு போய் விடுவதால் , இரண்டாம்பாதியில் நடிக்க அவ்வளவாக இடம் இல்லை

விஷாலின் நண்பனாய் வரும் சுந்தர்ராமிற்கு இது முக்கிய படம். அவரின் மனைவியாய் இனியா.. இவர்களின் பிளாஷ்பேக் அழுத்தம், ஜெகன் காமெடி ரசிக்கவைக்கிறது. சமர் படத்தினை போலவே ஒரு திரில்லர் கதையை கொடுக்க நினைத்து இருக்கிறார் திரு, முதல்பாதியில் ரசிக்க வைக்கும் திரு, இரண்டாம் பாதியில் சறுக்கி இருக்கிறார் .

படத்தின் பலம் :
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு
ரூபனின் எடிட்டிங்
விறுவிறுப்பான முதல்பாதி திரைக்கதை
விஷால் & லட்சுமி மேனனின் கெமிஸ்ட்ரி
ஜெகன் காமெடி

பலவீனம்
முகம் சுளிக்க வைக்கும் வில்லனின் ஃப்ளாஷ்பேக்..
படத்தின் இரண்டாம் பாதி கதை

மொத்தத்தில் படத்தின் முதல் பாதி ரசிக்க வைக்கிறது, இரண்டாம் பாதி கவிழ்த்து விட்டது 

Post a Comment

0 Comments