கதை:
பழனி முதல் பண்ணைக்காடு என்ற கிராமம் வரை பயணிக்கும் அரசு பேருந்து ஒன்றில் ஓட்டுநராகவும், நடத்துராகவும் செல்கிறார்கள் கருப்பு (பார்த்திபன் ) மற்றும் சுப்பு (எ) சுப்பையா (விமல்) . பண்ணைக்காடு என்ற ஊருக்கு தினசரி ஒரே ஒரு பயணம் என்பதால் இருவரும் இரவு நேரத்தில் பண்ணைக்காட்டில் தங்கிவிட்டு, காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்புவார்கள். சுப்பு (விமல்) கிடைத்த நேரத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணியை (மனிஷா யாதவ்) காதலிக்கும் பணியையும் செய்கிறார். இதே நேரத்தில் ஊர் பெரியவர் அண்ணா சாரின்(ராஜேஷ் ) மகன் , சிவாவுக்கு அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் நிர்மலா டேவிட்டுக்கும் (பூர்ணா) திருமண வேலை நடக்கிறது. எல்லாம் கைகூடிவரும் நேரத்தில் ஊரில் இருந்து வரும் சிவா, சுப்பு (விமல்) பேருந்தை ஓட்டும் சமயத்தில் கீழே இறக்கிறான். சிவாவின் சாவுக்கு சுப்புதான்(விமல்) காரணம் என்று கைதாகிறான். படத்தைப் பார்க்கும் ரசிகர்கர்களுக்கோ நிர்மலாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஜஸ்டின் (ரமணா) மீது சந்தேகம் ஆகிறது. இறுதியில் சாமி(வித்தார்த்) எப்படி மாட்டிக்கொள்கிறான், காதல் ஜோடிகள் ஒன்று சேருகிறதா, நிர்மலா (பூர்ணா) என்னவாகிறாள் என்பதுதான் கதை.
பார்த்திபன் :
படத்தினை நகர்த்தி செல்வதில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் , இவர் வரும் ஒவ்வொரு சீனும் சிரிப்பு ஒலியால் அரங்கம் அதிர்கிறது , தனக்கே உரிய நக்கல், கிண்டல் என கலக்குகிறார் ,
விமல்:
ஒரு இயல்பான நடத்துனராக நடித்து இருக்கிறார் ,மனிஷா வுடன் காதல் காட்சிகளிலும் , இறுதியல் பார்த்திபனுடன் சேர்ந்து யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிபதிலும் விமல் நடிக்கும் செய்து இருக்கிறார்
மனிஷா & பூர்ணா:
இசை :
வித்யாசாகரின் இசையில் ‘என்னடி என்னடி ஓவியமே’ என்ற பாடல் மட்டும் காதிற்கு இனிமை சேர்த்து இருக்கிறது
விதார்த்:
வித்தார்த் ஊரில் நல்லவன் போல் இருந்துவிட்டு திடீர் என்று வில்லனாக மாறுவது ,நம் மத்தியில் வாழும் இயல்பான மனிதன் திடீர் வில்லனாக மாறும் பாத்திரத்தில் விதார்த் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்
ஒளிப்பதிவு :
அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு மலை மற்றும் அதன் அழகு பிரதேசங்களையும் அள்ளி கொண்டு வந்திருகிறது , படம் முழுவதும் பச்சை பசேல் என்ற இடங்கள் அருவிகள் என கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது .
முடிவு : பண்ணைக்காடு சேர்ந்த மனிஷாவை விமல் காதலிப்பதற்கு ஊர்காரர்கள் எதுவும் சொல்லவே இல்லை. இப்படி ஒரு இருக்குமா? கிறிஸ்துவ பெண்ணான நிர்மலாவை தன் வீட்டில் வைத்து அண்ணா சார் ஏன் வளர்க்கிறார் என்பது புரியவில்லை. சாமி நிர்மலாவின் மீது கொண்ட பைத்தியம் செயற்கையாகத் தெரிகிறது
கதையும், வசனமும்தான் படத்தின் பலம், ஒரு வலுவான கதையை நகைச்சுவை, திடீர் திருப்பங்கள் என கலந்து கொடுத்து இருப்பதில் கரு.பழனியப்பன் வெற்றி பெற்று இருக்கிறார் ,
0 Comments