பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கிய சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு :
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இப்படத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கியிருந்த நிலையில் , இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார், மேலும் மூக்குத்தி அம்மன் 2 மிகவும் பிரமாண்டமாகவும் , நூறு கோடி பட்ஜெட்டில் , பான் இந்தியா படமாக எடுக்க உள்ளது வேல்ஸ் நிறுவனம் .
மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார், , ரெஜினா கசாண்ட்ரா, மீனா , குஷ்பு , அபிநயா, யோகிபாபு, கன்னட நடிகர் துனியா விஜய் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர் .
மேலும் இப்படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்
- என் கரியரிலே நான் இயக்கப் போகிற மிகப்பெரிய படம்... “இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக அமையும்” - சுந்தர் சி
- மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக விரதமிருக்கும் நயன்தாரா., அவங்க மட்டுமில்ல அவங்களோட குழந்தைகளும், அவங்க குடும்பமே விரதத்துல இருக்காங்க!" - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
- கதை பயங்கரமா இருக்கு - ஹிப்ஹாப் ஆதி
- எனக்கு ஒரு முக்கியமான ரோல் இருக்கு.. அது சர்ப்ரைஸாவே இருக்கட்டும் - ரெஜினா கசாண்ட்ரா
0 Comments