BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிக்கும் படத்தின் தொடங்கியது. படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், புது மையான கதைக்களத்தில் சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாக உள்ளதாம் .
மேலும் இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிட இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments